பக்தர்களோடு கிரிவலம் சென்ற அண்ணாமலையார்; அரோகரா கோஷத்தோடு ஆரத்தி எடுத்த மக்கள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28நவ 2023 12:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா முடிந்ததை யொட்டி உண்ணாமலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் மற்றும் பராசக்தியம்மன் காலையில் கிரிவலம் செனறனர். இதில் வெளிநாட்டு பக்தர்கள் முதல் ஏராளமான பக்தர்கள் உடன் சென்று தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை கோவிலில், இன்று (நவ.,28) அருணாசலேஸ்வரர் கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோயிலில் நேற்று முன்தினம் மஹாதீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, மலை உச்சியில், 11 நாட்களுக்கு தீபம் எரியும். தொடர்ந்து, மூன்று நாட்கள் தெப்ப திருவிழா நடைபெற்றுவருகிறது. இன்று உண்ணாமுலையம்மன் சமேதரராய் அருணாசலேஸ்வரர் கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கிரிவலப்பாதை முழுவதும் பக்தர்கள் ஸ்வாமிக்கு மண்டகப்படி செலுத்தி, கற்பூர ஆரத்தி எடுத்து சாமி தரிசனம் செய்தனர். கார்த்திகை தீபத் திருநாள் நிறைவடைந்த மறுதினம், மாட்டுப் பொங்கல் அன்று என வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே அண்ணாமலையார் கிரிவலம் வருவது குறிப்பிடத்தக்கது. இன்று தெப்ப உற்சவத்தில் பராசக்தி அம்மன் உற்சவம் நடக்கிறது. நாளை சுப்பிரமணியர் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது.