பழநி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்; ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரிப்பு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03டிச 2023 11:12
பழநி; பழநி முருகன் கோவிலுக்கு ஞாயிறு விடுமுறை நாளன்று பக்தர்கள் கூட்டம் இருந்தது.
பழநி முருகன் கோயிலுக்கு வெளியூர், வெளி மாநில பக்தர்கள் வருகை புரிந்தனர். ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. பொது, கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மலைக்கோயில் செல்ல, வின்ச், தரிசன வரிசையிலும் பக்தர்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து டிக்கெட் பெற்றனர். பழநி மலை அடிவாரம், கிரிவீதி சன்னதி வீதியில் ஆக்கிரமிப்பு அதிகளவில் இருந்தது. வெளிமாநில வியாபாரிகள் தொல்லை அதிகம் இருந்தது. திருஆவினன்குடி கோயிலில் கூட்டம் அதிகம் இருந்தது. அடிவாரம் முக்கிய வீதிகளில் வாகனங்களை நிறுத்தி இருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.