பதிவு செய்த நாள்
11
டிச
2023
04:12
காரைக்கால்; காரைக்காலில் வரும் 20ம் தேதி நடைபெறவுள்ள சனிப்பெயர்ச்சி முன்னிட்டு 162 இடங்களில் சி.சி.டிவி., கேமரா மூலம் பொதுமக்களை கண்காணிக்க போலீசார் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் திருநள்ளாறு பிரசித்திபெற்ற ஸ்ரீதர்பாரண்யோஸ்வரர் கோவில் தனி சன்னதியில் ஸ்ரீசனீஸ்வரபகவான் அனுக்கிரகமூர்த்தியாக அருள்பலித்து வருகிறார்.இதனால் நாட்டில் பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். இக்கோவில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி வரும் டிச.,20ம் தேதி புதன்கிழமை மாலை 5.20மணிக்கு மகரராசியிலிருந்து, கும்பராசிக்கு பிரவிசிக்கிறார். இதனால் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் சிரமம் இல்லாமல் தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் வரும் பக்தர்களை பாதுகாப்பு நடவடிக்கையாக மாவட்ட போலீசார் கோவில் வளாகத்தில் அதிநவீன வசதிகளுடன் சி.சி.டி.வி., கண்காணிப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்பு அறையை மாவட்ட சீனியர் எஸ்.பி.(பொறுப்பு)நிதின் கவுகால் ரமேஷ்,மற்றும் எஸ்.பி.சுப்பிரமணியன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் சனிஸ்வரபகவான் கோவில் மற்றும் நளன்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 162 இடங்களில் சி.சி.டி.வி., கேமரா அமைக்கப்பட்டுள்ளது.மேலும் டிரோன்கேமிரா மூலம் கண்காணிக்க நடவடிக்கை பொதுமக்கள் பிரச்சனைகள் குறித்து 100 என்ற இலவச எண் அறிமுகப்படுத்தியுள்ளது.முக்கிய இடங்களில் 8 கண்காணிப்பு கோபுரம், 13இடங்களில் வாகனம் நிறுத்தும் இடம், 6முதலுதவி மையங்கள், 4தீயணைப்பு வாகனம், 3 ஆம்புலன்ஸ்,முக்கிய இடங்களில் மருந்துமுகாம், கோவில் நான்கு வீதிகளில் குடிநீர்,கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டது.
எனவே பக்தர்கள் எவ்விதம் சிரமம் இல்லாமல் கோவிலுக்கு வருவதற்கு சிறப்பு வழிகள் மற்றும் வி.ஐ.பி.,க்களுக்கு தனிவழிகள், அவசரக்காலங்களில் மக்களை வெளியோற்றுவதற்கு சிறப்புவழிகள், கோவிலை சுற்றி 15இடங்களில் ஆன்லைன் டிக்கெட் மையங்கள், நளன்குளத்தில் குளிக்கும் பக்தர்களை படகுகள் மூலம் கண்காணிக்க நடவடிக்கை, சுமார் 10க்கு மேற்பட்ட இடங்களில் அன்னதானம் மையங்கள் திருநள்ளார் கோவிலிருந்து புதுச்சேரி தலைமை அலுவலகத்திற்கு வயர்லஸ் கருவி மூலம் தகவல்கள் பறிமாற்றம் பணிகள், மேலும் சனிப்பெயர்ச்சி பாதுகாப்புக்கு புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த 1800 போலீசார் மற்றும் 200க்கு மேற்பட்ட என்.எஸ்.எஸ்.,மாணவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட உள்ளனர்.இதனால் பக்தர்கள் சிரமம் இன்றி பகவானை தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.