காரைக்கால்; திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சோமவார விழாவை யொட்டி 1008 சங்காபிஷேகம் நடந்தது.
காரைக்கால் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலித்து வருகிறார். சிவ ஆலயங்களில் கார்த்திகை மாத சோமவார திங்கள் கிழமைகளில் விஷேச பூஜைகள் நடைபெறும். திருநள்ளாறு கோவிலில் ஒவ்வொரு திங்கள் கிழமையும் 108 சங்காபிஷேகம் நடந்து வந்தது. சோமவார நிறைவையொட்டி இன்று 1008 சங்காபிஷேகம் நடந்தது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, புன்னியாகவாஜனம், கலசபூஜை, மகாபூர்ணாஹீதி தீபாரதனை நடந்தது. பின் பூஜிக்கப்பட்ட 1008 சங்குகளுடன் சிவாச்சாரியர்கள் மேளம் தாளங்களுடன் ஆலயத்தை சுற்றி வந்து, தர்பாரண்யேஸ்வரர், சனீஸ்பகவான், தியாகராஜருக்கு மகா அபிஷேகம் செய்தனர். விழாவையொட்டி கோவிலில் உள்ள சொர்ணகணபதி, முருகன், பிரணாம்பிகை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும் மகா தீபாராதனையும் நடத்தப்பட்டது. சங்காபிஷேகத்தில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள்,கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.