முத்தங்கி கவச அலங்காரத்தில் திருவட்டத்துறை சிவன் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17டிச 2023 10:12
திட்டக்குடி; திட்டக்குடி அடுத்த திருவட்டத்துறை திரிபுரசுந்தரி சமேத தீர்த்தபுரீஸ்வரர் கோவிலுக்கு 2லட்ச ரூபாய் மதிப்பிலான முத்தங்கி கவசங்கள் காணிக்கையாக வழங்கப்பட்டது.
கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த திருவட்டத்துறையில் திரிபுரசுந்தரி சமேத தீர்த்தபுரீஸ்வர் கோவில் உள்ளது. சிவனின் தேவாரப்பால் பெற்ற 274சிவாலயங்களில், 212வது தேவார திருத்தலம். அப்பர், சம்பந்தர், சுந்தரர், ஆதிசங்கரர், குகைநமச்சிவாயர் மற்றும் ராமலிங்க அடிகளால் பாடல்பெற்ற பழமையான நடுநாட்டுத்தலமாகும். சேலத்தைச்சேர்ந்த பக்தர் ஒருவர், இக்கோவிலுக்கு 2லட்ச ரூபாய் மதிப்பிலான முழுமையான முத்தங்கி கவசங்களை காணிக்கையாக அளித்தார். இன்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சுவாமி மற்றும் அம்பாளுக்கு முத்தங்கி கவசங்கள், கிரீடம் அணிவிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி வழிபாடு செய்தனர்.