மயிலாடுதுறை கோயில்களில் தனுர்மாத பூஜை; தருமை ஆதீனம் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17டிச 2023 11:12
மயிலாடுதுறை; மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஆண்டுதோறும் தனுர் (மார்கழி) மாதம் 30 நாட்களும் தினந்தோறும் பல கோயில்களில் வழிபாடு நடத்துவது வழக்கம். அதேபோல் இன்று மார்கழி மாதம் முதல் நாளையொட்டி தருமை ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் மயிலாடுதுறை மாயூரநாதர் சுவாமி கோயிலுக்கு எழுந்தருளினார். அங்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது தொடர்ந்து விநாயகர், சுப்ரமணியன், மாயூரநாதர், அபயாம்பிகை அம்மன், குமரக்கட்டளை சுப்ரமணியர் சன்னதி உட்பட அனைத்து சன்னதிகளிலும் வழிபாடு நடத்தினார். இதில் தருமை ஆதீனம் சுப்ரமணிய தம்பிரான் சுவாமிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் தருமை ஆதீனத்திற்கு சொந்தமான ஞானாம்பிகை சமேத வதானேஸ்வரர் கோயிலில் தருமை ஆதீனம் 27வதுகுருமகா சன்னிதானம் எழுந்தருளி சுவாமி, அம்பாள், மேதா தட்சிணாமூர்த்தி சன்னதி உட்பட அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு வழிபாடு மேற்கொண்டு கோ பூஜை செய்து வழிபாடு நடத்தினார். இதில் ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள், ஆதீன பொதுமேலாளர் ரங்கராஜ், நகராட்சி தலைவர் செல்வராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.