திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா; தருமபுரம் ஆதீனம் ஆய்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19டிச 2023 10:12
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா குறித்து தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் ஆய்வு மேற்கொண்டார்.
புதுச்சேரி, காரைக்கால், திருநள்ளாறு தர்பாரண்யோஸ்வரர் கோவிலில் தனி சன்னதியில் சனீஸ்வரபகவான் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பலித்து வருகிறார். இங்கு நாட்டில் பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். இக்கோவிலில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழாவில் வரும் டிச.,20ம் தேதி புதன்கிழமை மாலை 5.20மணிக்கு மகரராசியிலிருந்து, கும்பராசிக்கு சனீஸ்வரபகவான் பிரவிசிக்கிறார். இந்த சனிப்பெயர்ச்சி விழாவில் பக்தர்கள் சிரமம் இல்லாமல் தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. சனிப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் குறித்து நேற்று தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் ஆய்வு மேற்கொண்டார். பக்தர்கள் பாதுகாப்பு மற்றும் சுவாமி தரிசனம் குறித்தும் ஆதினம் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக அம்மையார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். உடன் கலெக்டர் குலோத்துங்கன்.கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.