பதிவு செய்த நாள்
19
டிச
2023
01:12
ராமேஸ்வரம்; தென் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் ராமேஸ்வரம் கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டத்தில் பெய்த கனமழையால் முக்கிய சாலைகள், வீடுகள், கிராமங்களில் மழை நீர் புகுந்து வெள்ளக் காடாக மிதக்கிறது. இதனால் வெளி மாநிலம் மற்றும் பிற மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள், சுற்றுலா பயணிகள் இம்மாவட்டத்தில் உள்ள திருக்கோயில்கள், சுற்றுலா இடங்களுக்கு செல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். இச்சூழலில் மழையால் பாதிப்பு இல்லாத ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பார்வை திரும்பியது. இதனால் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இவர்கள் இன்று காலை முதல் கோயில் கிழக்கு, வடக்கு ரதவீதியில் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்தனர். 4 மாவட்டத்தில் பெய்த மழையில் ஒரு சதவீதம் கூட ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்யவில்லை. இங்கு பரவலாக 2 முதல் 4 செ.மீ., வரை மழை பெய்துள்ளது.