அருணாசலேஸ்வரர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு; தமிழகத்திலேயே சிவ தலங்களில் இங்கு மட்டுமே நடக்கும் சிறப்பு!
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23டிச 2023 03:12
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, வைகுண்ட வாயில் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவை முன்னிட்டு வைகுண்ட வாயிலில் சிறப்பு பூஜை நடந்தது. கோவிலில் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள பாமா, ருக்மணி சாமேதராய் வேணுகோபால் சுவாமிக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தமிழகத்திலேயே சிவ தலங்களில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மட்டுமே வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, வைகுண்ட வாயில் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுவது குறிபிடத்தக்கது.