திருப்பதியில் தங்கத்தேரில் மலையப்ப சுவாமி உலா; லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23டிச 2023 03:12
திருப்பதி; வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருமலை திருப்பதியில் மலையப்பசாமி தங்கத்தேரில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
திருமலை திருப்பதியில் வைகுந்தவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு இன்று அதிகாலை கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர். இன்று (23ம் தேதி) அதிகாலை துவங்கி ஜனவரி 1ம் தேதி வரை சொர்க்க வாசல் திறந்திருக்கும். நாளொன்றுக்கு 70,000-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு பக்தர்கள் முன்னுாறு ரூபாய் கட்டணத்தில் அனுமதிக்கப்படுவர். வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் தங்கத்தேரில் மலையப்பசாமி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோஷத்துடன் தரிசனம் செய்தனர்.