பதிவு செய்த நாள்
08
ஜன
2024
11:01
பழநி; பழநி முருகன் கோயிலுக்கு தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரை, ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்து உள்ளது. ஞாயிறு விடுமுறை நாளை முன்னிட்டு வெளியூர், வெளி மாநில அதிக பக்தர்கள் வருகை புரிந்தனர். பழநி கோயில் கிரிவிதி, அடிவாரம் பகுதிகளில், ஆக்கிரமிப்பு ஜன.5 ல் அகற்றப்பட்டன. ஆனால் நேற்று ஜன.7., ஆக்ரமிப்பு துவங்கியது. தள்ளுவண்டி கடைகள், தட்டு வியாபாரிகள், கடைகள் முன் சில அடி தூரம் ஆக்கிரமிப்பு செய்தனர். அதிகாரிகள் ஆக்கிரமிப்பு தொடர்ந்து நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாகனங்கள் வருகையால் கிரிவீதி சுற்றுலா வாகன நிறுத்துமிடம் நிரம்பியது. கிரிவீதியில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசலால் சிரமம் பக்தர்களுக்கு ஏற்படுகிறது. பூங்காரோடு, கிரிவீதியில் கூட்டம் அதிகம் உள்ள போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வின்ச் நிலையங்கள் அருகே அருகே வாகனங்களை நிறுத்த முடியாமல் பக்தர்கள் சிரமம் அடைகின்றனர்.
மலைக்கோயிலில் வெளிப்பிரகாரத்தில் அதிக கூட்டம் இருந்ததால் பக்தர்கள் சிரமம் அடைந்தனர். கூட்டத்தில் தவறிய நபர்களை கண்டறிய உதவி மையங்களை அதிகரிக்க வேண்டும். பாதுகாவலர்களை அதிகரிக்க வேண்டும். மலைக்கோயில் செல்ல, வின்ச், தரிசன வரிசையிலும் பக்தர்கள் பல மணிநேரம் காத்திருந்து டிக்கெட் பெற்றனர். மலைக்கோயிலில் பொது, கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் மூன்று மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பஸ்ஸ்டாண்டில் பக்தர்கள் சொந்த ஊருக்கு செல்ல பஸ் வசதி குறைவாக இருந்ததால் பல மணிநேரம் காத்திருந்தனர். பஸ் வசதியை போக்குவரத்து நிர்வாகம் அதிகரிக்க வேண்டும்.