ஈச்சனாரி மகாலெட்சுமி மந்திரில் ஆஞ்சநேயருக்கு மகா அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜன 2024 10:01
கோவை; ஈச்சனாரி மகாலெட்சுமி மந்திரில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இக்கோயில் மகாலட்சமி மந்திர் என அழைக்கப்பட்டாலும் முப்பெரும் தேவியரான துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று தேவியர்களும் ஒரே சன்னதியில் கிழக்கு பார்த்தப்படி அமர்ந்த திருக்கோலத்தில் காட்சியளிக்கின்றனர். அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, இங்குள்ள அனுமன் சன்னிதியில் அபயஹஸ்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அனுமன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.