நத்தம் ராக்காச்சி அம்மன் கோவிலில் பூட்டை உடைத்து திருட்டு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜன 2024 10:01
நத்தம், நத்தம் ராக்காச்சிபுரத்தில் ராக்காச்சி அம்மன் கோவில். இந்த கோவிலில் தினமும் காலை, மாலை நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் வழக்கம்போல் கோவில் திறக்கப்பட்டு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்றார். இந்நிலையில் நேற்று காலை கோவிலை திறக்க வந்த போது கோவில் பூட்டு மற்றும் உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது அம்மனின் 2 கிராம் மூக்குத்தி,150 கிராம் வெள்ளி கொலுசு, 5 குத்துவிளக்குகள், 1 தூண்டி விளக்கு மற்றும் உண்டியலில் இருந்த ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து கோவில் பூசாரி மீனாட்சிசுந்தரம் நத்தம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ்-இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.