கோவை; ராம் நகர் கோதண்ட ராமர்கோவிலில் மகா ருத்ர யக்ஞம் நடைபெற்றது. இதில் முதல் நிகழ்வாக காலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம் அதைத்தொடர்ந்து காலை 7.30மணி அளவில் மஹன் யாச ஜெபம், ருத்ர ஆவாஹனம், ஸ்ரீ ருத்ர ஜெபம், ஏகாதச திரவிய ருத்ரா அபிஷேகம், கோ பூஜை, ஸ்ரீ ருத்ர ஹோமம், தம்பதி பூஜை, கலாசாபிஷேகம் நடந்தது. தொடந்து வேத பண்டிதர்கள் மந்திரங்கள் முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.