Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அயோத்தி ராமர் கோயிலில் அலைமோதும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதியில் வைகுண்ட வாசல் தரிசனம்: 10 நாட்கள் திறந்திருக்கும்: 8.34 லட்சம் பக்தர்களுக்கு அனுமதி!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பதியில் வைகுண்ட வாசல் தரிசனம்: 10 நாட்கள் திறந்திருக்கும்: 8.34 லட்சம் பக்தர்களுக்கு அனுமதி!

பதிவு செய்த நாள்

19 நவ
2026
11:11

திருமலை ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் 20 முதல் 29-ம் தேதி வரை நடைபெற உள்ள வைகுண்ட துவார தரிசனத்திற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த 10 நாட்களில் மொத்தம் 8.34 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான (TTD) அதிகாரமளிக்கப்பட்ட குழுத் தலைவர் முத்தடா ரவிச்சந்திரா தெரிவித்துள்ளார்.


திருமலையில் புதன்கிழமை நடைபெற்ற அதிகாரமளிக்கப்பட்ட குழுக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார். வைகுண்ட ஏகாதசி, துவாதசி நாட்களில் சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


முதல் இரண்டு நாட்கள் ஆன்லைன் டோக்கன் தரிசனம்


வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி ஆகிய முதல் இரண்டு நாட்களுக்கான ஸ்லாட்டட் சர்வ தரிசன (SSD) டோக்கன்கள் ஆன்லைனில் வெளியிடப்படும். இந்த இரண்டு நாட்களிலும் நேரடி சர்வ தரிசனம் கிடையாது. தொடர்ந்து வரும் எட்டு நாட்களுக்கு பக்தர்கள் சர்வ தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்த தரிசனத்தில் 92 சதவீதம் சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அலிபிரி - எஸ்.வி. உயிரியல் பூங்கா சாலை அருகே தேவஸ்தானத்துக்குச் சொந்தமான நிலத்தில் ரூ.2,750 கோடி செலவில் பிரம்மாண்ட பக்தர்கள் நகரியம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்ரீவாணி அறக்கட்டளை நிதி மூலம் செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR), வடிவமைப்பு மற்றும் மேற்பார்வைப் பணிகளுக்காக ஆலோசனை நிறுவனத்தைத் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தரமான தங்குமிடம் மற்றும் நவீன அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதே இதன் நோக்கம்.


500 நாட்டுப் பசுக்கள் வாங்க ரூ.7.50 கோடி


ஏழுமலையானின் தினசரி கைங்கரியங்களுக்குத் தேவையான பால், நெய் ஆகியவற்றைத் தேவஸ்தானமே உற்பத்தி செய்து வழங்கும் வகையில் 500 நாட்டுப் பசுக்களை வாங்கவும், அவற்றைக் கொண்டு வரவும் ரூ.7.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தினமும் 2,000 லிட்டர் பால், 80 கிலோ நெய் கிடைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.


தூய்மைப் பணிக்கு கூடுதல் ஊழியர்கள்


திருமலையில் தூய்மைப் பணிகளை மேம்படுத்த 321 தூய்மைப் பணியாளர்கள், 27 மேற்பார்வையாளர்கள் என மொத்தம் 348 பேரை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், திருமலையை நிகர பூஜ்ஜிய கார்பன் வெளியீடு கொண்ட சுற்றுச்சூழல் நட்பு தலமாக மாற்றுவதற்காகத் தனியாக சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை உருவாக்கப்பட உள்ளது. இதற்குத் தலைமைப் பொறுப்பில் ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளர் டி.வி. சத்யநாராயணா ஓராண்டுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். ஆண்டுதோறும் ஸ்ரீவாரி பிரம்மோற்சவத்துக்குப் பிறகு வழங்கப்படும் போனஸ் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. நிரந்தர ஊழியர்களுக்கு ரூ.16,940-ம், ஒப்பந்த மற்றும் வெளிப்பணியாளர் ஊழியர்களுக்கு ரூ.8,289-ம் வழங்கப்பட உள்ளது. மேலும், ஸ்ரீவாரி கோயிலில் நாலாயிர திவ்யப் பிரபந்தம் பாராயணம் செய்யும் பாராயணதாரர்களுக்கான மதிப்பூதியத்தையும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


ஏழை மற்றும் எளிய மக்களுக்கு உயர்தர மருத்துவச் சேவைகளை வழங்கவும், நிலுவைத் தொகைகளைச் செலுத்தவும் ஸ்விம்ஸ் (SVIMS) மருத்துவமனைக்கு ரூ.41.23 கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திருப்பதி எஸ்.வி. ஆயுர்வேதக் கல்லூரியில் பி.ஏ.எம்.எஸ். படிப்புக்கான மாணவர் சேர்க்கை இடங்களை 40-லிருந்து 60 ஆக உயர்த்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அலிபிரி அருகே செயல்படும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாரம்பரிய சிற்பம் மற்றும் கட்டடக்கலைக் கல்லூரியில் 229 மாணவர்கள் தங்கும் வகையில், 41,167 சதுர அடி பரப்பளவில் ரூ.23 கோடியில் புதிய விடுதி கட்டப்பட உள்ளது. ஸ்ரீனிவாச மங்காபுரத்தில் உள்ள ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலிலிருந்து ஸ்ரீவாரிமெட்டு வரை செல்லும் சாலையை மேம்படுத்த ரூ.9.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், அலிபிரி நடைபாதையில் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலிலிருந்து மொக்காளமிட்டா வரை நடந்து செல்லும் பக்தர்களின் வசதிக்காக, ஐ.ஐ.டி. நிபுணர்களின் உதவியுடன் கேபிள் பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படுகின்றன.  திருமலை - திருப்பதி வனப்பகுதியில் மனிதர்கள் - வனவிலங்குகள் மோதலைத் தடுக்கவும், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், வனவிலங்குகளைப் பாதுகாக்கவும் ஆந்திர வனத்துறைக்கு 2026 முதல் 2028 வரையிலான இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.16.40 கோடி நிதி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


வைகுண்ட துவார தரிசனத்தை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக தரிசனம், தங்குமிடம், போக்குவரத்து, தூய்மை மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் மேற்கொண்டு வருகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா நேற்று காப்புக் ... மேலும்
 
temple news
மூணாறு: சபரிமலை சீசன் துவங்கிய நிலையில், ஐய்யப்ப பக்தர்கள் வருகையால் சத்திரம் களை கட்டியது.இடுக்கி ... மேலும்
 
temple news
மருதமலை: திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்பதை வேண்டி, சிறுமி ... மேலும்
 
temple news
அயோத்தி ஸ்ரீராம ஜென்மபூமி கோயிலில் வீற்றிருக்கும் குழந்தை ராமரான ஸ்ரீராம்லல்லாவை தரிசிக்க, நாடு ... மேலும்
 
temple news
மதுரை:மதுரை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar