பதிவு செய்த நாள்
19
ஜன
2024
05:01
காளஹஸ்தி; சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலுக்கு தினந்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர் அவ்வாறு வரும் பக்தர்கள் தங்கள் காணிக்கைகளை கோயில் வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள உண்டியல்களில் செலுத்துவது வழக்கம் அவ்வாறு பக்தர்கள் செலுத்திய காணிக்கைப் பணத்தை இன்று கோயில் நிர்வாக அதிகாரி வெங்கடேசு முன்னிலையில் ஊழியர்கள் கணக்கிடும் பணியில் ஈடுபட்டனர். அதில் (தேதி -18-01-2024 கடந்த 22 நாட்களுகளில் உண்டியல் மூலம் கிடைத்த வருமானம் - 1,62,43,284/- ரூபாய், தங்கம் :-57. கிராம். வெள்ளி :-580. கிராம். வெளிநாட்டு பணம் யு.எஸ்.ஏ - 964. டாலர்கள், ஆஸ்திரேலியா - 60. டாலர்கள், இங்கிலாந்து - 60. பவுண்டுகள், U.A.E - 5. திர்ஹாம்கள், சிங்கப்பூர் - 57.டாலர்கள், மலேசியா - 1.ரிங்கிட்ஸ், யூரோ - 60. யூரோ, கனடா - 10.டாலர்கள் இருந்ததாக தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் மோகன் ரெட்டி மற்றும் தேவஸ்தான செயல் அலுவலர் ஏ. வெங்கடேசு தெரிவித்தனர்.இந்தஉண்டியலில் இருந்த பணம் மற்றும் தங்கம் வெள்ளி ஆகியவற்றை கணக்கிடும் பணியில் கோயில் துணை நிர்வாக அதிகாரி எஸ்.வி. கிருஷ்ணா ரெட்டி, ரவீந்திர பாபு, வித்யாசாகர் ரெட்டி, ஹரி மாதவ் ரெட்டி, தனஞ்சயா, மேற்பார்வையாளர்கள் - கோதண்டபாணி, ஸ்ரீதர் பாபு, தேவஸ்தான ஊழியர்கள், பணியாளர்கள், யூனியன் வங்கி காணிப்பாக்கம் கிளை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.