இளையான்குடி; இளையான்குடி அருகே மாணிக்கவாசகர் நகர் மாணிக்க விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இளையான்குடி அருகே மாணிக்க வாசகர் நகரில் உள்ள மாணிக்க விநாயகர் கோவிலில் நேற்று கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கி நடைபெற்று வந்தன. இன்று காலை 3ம் கால யாக பூஜை நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கோயிலை சுற்றி வலம் வந்து கோபுரத்திற்கு கொண்டு சென்று புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.இதனைத் தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.கோவில் வளாகத்தில் அன்னதானம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் இளையான்குடி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை மாணிக்கவாசக நகர் பொதுமக்கள் செய்திருந்தனர்.