பதிவு செய்த நாள்
25
அக்
2012
10:10
சேலம்: மதுரையில் உள்ள பிரசித்தி பெற்ற, கிருஷ்ண பலராம் கோவில் கும்பாபிஷேக விழா வரும், 27, 28 தேதிகளில் நடக்க உள்ளது.கிருஷ்ண பலராம் சேவா அறக்கட்டளை சார்பில், மதுரை- நத்தம் ரோட்டில், திருப்பாலையில், கிருஷ்ண பலராம் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா, அக்டோபர், 27, 28 தேதிகளில் நடக்க உள்ளது. விழாவையொட்டி, சிறப்பு பூஜைகள், அன்னதானம் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.கோவில் திருப்பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. பக்தர்கள், நன்கொடை மற்றும் பொருளுதவி வழங்கலாம். கும்பாபிஷேக விழாவில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு, கிருஷ்ணபெருமானின் அருளை பெற வேண்டும் என, கிருஷ்ண பலராம் சேவா அறக்கட்டளை நிர்வாகி பலராமகோவிந்ததாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.