பதிவு செய்த நாள்
06
பிப்
2024
03:02
திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் தை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கருட சேவை உற்சவம் நடந்தது.
திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் ஆண்டுக்கு இரு பிரம்மோற்சவங்கள் நடைபெறுகிறது. தை அமாவாசை அன்று சாலிஹோத்ர மகரிஷிக்கு வீரராகவர் காட்சியளித்த தினம் என்பதால் தை பிரம்மோற்சவம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த ஆண்டிற்கான தை பிரம்மோற்சவம், பிப்.,4 கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். விழாவின் மூன்றாம் நாளான இன்று கருட சேவை உற்சவம் சிறப்பாக நடந்தது. கருட வாகனத்தில் வீரராகவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நாளை பிப்.,7ல் சேஷ வாகனத்தில் அருள்பாலிக்கிறார். பிப்.,8- நாச்சியார் திருக்கோலம், பிப்.,9- தை அமாவாசை, ரத்னாங்கி சேவை, பிப்.,10- தேர் புறப்பாடு, பிப்.,11 திருப்பாதம் சாடி திருமஞ்சனம், பிப்.,12 ஆள்மேல் பல்லக்கு, 13ம் தேதியுடன் நிறைவடைகிறது.