கபாலீஸ்வரர் கோயிலில் தீ வைத்த மர்ம ஆசாமி; பக்தர்கள் அதிர்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07பிப் 2024 04:02
சென்னை; மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் வாசலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மர்ம ஆசாமியால் பக்தர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 257 வது தேவாரத்தலம் ஆகும். இத்தல இறைவன் மேற்கு பார்த்து அருள்பாலிப்பது சிறப்பு. இங்கு ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும். இது இத்தலத்தின் மிக முக்கிய சிறப்பு. உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் இத்தலத்து அம்பாளை வணங்கினால் விரைவில் குணமடைகிறது. இத்தகைய சிறப்பு மிக்க இத்தலத்தில் இன்று, கோயில் வாசலில் உட்கார்ந்து கொண்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மர்ம ஆசாமியால் பக்தர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். தீ வைத்த மர்ம ஆசாமி யார்? என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.