Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கம்பீர விநாயகர் கோயிலில் லஷ்மி ... பிரதோஷம் : சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு பிரதோஷம் : சிவன் கோயில்களில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பத்ரகாளியம்மன் கோவிலில் குளிகை நேரத்தில் பிரார்த்தனை செய்த இ.பி.எஸ்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பத்ரகாளியம்மன் கோவிலில் குளிகை நேரத்தில் பிரார்த்தனை செய்த இ.பி.எஸ்

பதிவு செய்த நாள்

07 பிப்
2024
06:02

மேட்டூர்; தலைமை பதவியில் நீடிக்க, அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவிலில் வழிபட்டார்.

சேலம் மாவட்டம் மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவில் புனரமைக்கப்பட்டு, 2013 ஜன., 23ல் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த, இ.பி.எஸ்., முன்னிலையில் கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது முதல், அடிக்கடி இக்கோவிலுக்கு இ.பி.எஸ்., வந்து செல்கிறார். அமைச்சர் பதவியை தொடர்ந்து முதல்வர், அ.தி.மு.க., பொதுச்செயலர் என முக்கிய பதவிகளை கைப்பற்றினார். இந்நிலையில் இன்று காலை, 10:45 மணிக்கு அக்கோவிலுக்கு வந்தார். அறநிலையத்துறை செயல் அலுவலர் திருஞான சம்பந்தர், அர்ச்சகர்கள், பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்றனர். பின் பத்ரகாளியம்மனை வழிபட்ட இ.பி.எஸ்., பிரகாரத்தை சுற்றி வந்து அன்னதானத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து உற்சவரை அமர வைக்கும் ஊஞ்சல் முன் கைகளை கட்டி சிறிது நேரம் நின்று பிரார்த்தனை செய்து விட்டு, 11:45க்கு புறப்பட்டார். இதில், மேச்சேரி பேரூர் செயலர் குமார், கிழக்கு, மேற்கு ஒன்றிய செயலர்கள் சந்திரசேகர், செல்வம், மாவட்ட மகளிர் அணி செயலர் லலிதா, ஜெ., பேரவை மாநில துணை செயலர் கலைரசன், வக்கீல் அணி செயலர் சித்தன் உள்ளிட்ட, அ.தி.மு.க., நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

குளிகை நேரத்தில் பிரார்த்தனை; இன்று சுக்ரனுக்கு உரிய பூராட நட்சத்திரம் காலை, 11:00 முதல், 12:00 மணி வரை. இந்த ஒரு மணி நேரம் தலைமை பதவியில் நீடிக்க விரும்புவோர் வழிபாடு செய்யும் சூரிய ஓரை. பஞ்சபட்சி சாஸ்திரப்படி காலை, 10:40 முதல் மதியம், 1:15 வரை பட்சிகளில் வல்லுாறு பட்சி அரசு செய்யும் நேரம். இ.பி.எஸ்., நாள், நட்சத்திரம், ஓரை, பஞ்சபட்சி என அனைத்து நல்ல நேரத்தை கணக்கிட்டு கோவிலில் வழிபட்டுள்ளார். அவர் வழிபாடு முடிந்து கோவில் அலுவலகத்தில் அமர்ந்தார். அப்போது, கொங்கணாபுரம் தம்பதியர், அவர்களது, 10 மாத ஆண் குழந்தைக்கு பெயர் வைக்க கேட்டுக்கொண்டனர். அவர், ‘விசாகன்’ என பெயர் சூட்டினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar