கம்பீர விநாயகர் கோயிலில் லஷ்மி நாராயண பெருமாளுக்கு சிறப்பு பூஜை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07பிப் 2024 05:02
கோவை; கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 1 ல் உள்ள கம்பீர விநாயகர் கோயிலில் தை மாதம் நான்காவது புதன்கிழமையை முன்னிட்டு கோயிலில் இருக்கும் லஷ்மி நாராயண பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் நீல நிற வஸ்திரம் மற்றும் வெண்பட்டு உடுத்தி புஷ்ப அலங்காரத்தில் பெருமாள் மற்றும் தாயார் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.