காளஹஸ்தி சிவன் கோயிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்வ அழைப்பிதழ் வெளியீடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21பிப் 2024 03:02
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்வத்திற்கான சுவரொட்டிகளை, கோயில் வளாகத்தில் உள்ள குருதஷினாமூர்த்தி சன்னதி அருகில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து வழிப்பட்ட பின்னர் சுவரொட்டி (அழைப்பிதழ்) வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஸ்ரீகாளஹஸ்தி சட்டமன்ற உறுப்பினர் திரு. மதுசூதன் ரெட்டி தம்பதியினர் விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.தாரக சீனிவாசுலு மற்றும் கோயில் நிர்வாக அதிகாரி எஸ்.வி.நாகேஸ்வர ராவ், கோயில் அதிகாரிகள் ஊழியர்கள் அர்ச்சகர்கள் வேத பண்டிதர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.