பதிவு செய்த நாள்
27
பிப்
2024
11:02
பெங்களூரு; மாகடி ரோட்டில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில், மார்ச் 8ம் தேதி சிவராத்திரி அன்று புஷ்ப பேட்டை கரக விழா நடக்கிறது. பெங்களூரு மாகடி ரோடு பின்னி மில் அருகில், மார்ச் 8ம் தேதி, மஹா சிவராத்திரி அன்று 47 வது ஆண்டு புஷ்பேட்டடை கரக விழா நடக்கிறது. அன்று காலையில் காட்டன் பேட்டடை அங்காள பரமேஸ்வரி மூல பீடத்திலிருந்து 1,008 பால் குடம் ஊர்வலமாக புறப்பட்டு, கோவிலை வந்தடைகிறது. பெங்களூர் மத்திய தொகுதி பா.ஜ., – எம்.பி , மோகன், பா.ஜ., முன்னாள் அமைச்சர் சோமண்ணா, முன்னாள் கவுன்சிலர் நாகராஜ் பங்கேற்கின்றனர். அன்று இரவு கோவிலில் கங்கா பூஜை நடக்கிறது. அதன் பின், புஷ்பா பேட்டை கரகம் எடுக்கப்படுகிறது.
கோவில் தலைவர் வெங்கடேஷ் ஏழுமலை சுவாமிகள், கரகத்தை 27 வது ஆண்டு எடுக்கிறார். கே.பி., அக்ரஹாரா ஈஸ்வரன் கோவிலில் இருந்து புறப்படும், கரக ஊர்வலம் டி.சி.எம்., ரா யன் ரோடு முருகன் கோவில், போலீஸ் ரோடு முக்கிய வீதி, சிட்டி மார்க்கெட் காம்பிளக்ஸ் வழியாக, பெ ரிய தர்மராஜா ஆலயத்திற்கு செல்கிறது. அங்கு பூஜை முடிந்த பின்னர் தவக்கல் மசூதி, காட்டன் பேட்டடை காசி ஈஸ்வரன் கோவில், பின்னி மில் வழியாக மீண்டும் கோவிலை வந்தடைகிறது. அதன் பின்னர் அம்மனுக்கு ஹோமம், மூன்று கால பூஜை , அபிஷேகம் நடக்கிறது. வரும் 9ம் தேதி காலை 11:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. ராஜராஜேஸ்வரி கோவிலின் ஜெயே ந்திரபுரிமகாசுவாமிகள், தேரைவடம் பிடித்து இழுத்து துவக்கி வைக்கிறார். கர்நாடக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ், பெங்களூரு மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் பிரமோத், மல்லேஸ் உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். வரும் 10 ம் தேதி மாலையில் மயானகொள்ளை, மகிஷாசுரசம்ஹாரம் நடக்கிறது. கர்நாடகா தமிழ் ஐ.பி.எஸ்.,அதிகாரி ஹரி சேகரன் பங்கேற்கின்றனர். குமார் ஏழுமலை சுவாமிகள் காளி வேடம் பூண்டு, அகோர நர்த்தனம் ஆடிக்கொண்டு மினர்வா மில் வழியாக, ஸ்ரீராமபுரம் மயானத்தில் மகிஷாசுரன் பிண்டத்தின் மீது சூரசம்ஹாரம் நடக்கிறது. இதன் பின்னர் தீ மிதி விழா நடக்கிறது.