Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகா சிவராத்திரி; ஏன் இத்தனை ... கோவிலுார் ஜெம்புகேஸ்வரர் கோவிலில் 20 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் கோவிலுார் ஜெம்புகேஸ்வரர் கோவிலில் 20 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
63 நாயன்மார்களுடன் ஆதியோகி தேர் பவனி: பாதயாத்திரையாக வந்த சிவபக்தர்கள்
எழுத்தின் அளவு:
63 நாயன்மார்களுடன் ஆதியோகி தேர் பவனி: பாதயாத்திரையாக வந்த சிவபக்தர்கள்

பதிவு செய்த நாள்

07 மார்
2024
03:03

தொண்டாமுத்தூர்; மஹா சிவராத்திரியை முன்னிட்டு கோவை ஈஷா யோகா மையத்திற்கு, 63 நாயன்மார்கள், ஆதியோகி தேருடன், பல்வேறு மாநிலங்களில் இருந்து சிவ பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தனர்.

கோவை ஈஷா யோகா மையத்தில், மஹா சிவராத்திரி விழாவையொட்டி, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, உ.பி., உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சிவ பக்தர்கள், பாதயாத்திரையாக வந்தனர். சென்னை, பெங்களூரு, நாகர்கோவில், பட்டுக்கோட்டை, பொள்ளாச்சி, கோவை ஆகிய, 6 இடங்களில் இருந்து வெவ்வேறு நாட்களில் புறப்பட்ட குழுவினர் ஆதியோகி திருமேனியுடன் கூடிய தேர்களை வடம்பிடித்து இழுத்து வந்தனர். அனைத்து குழுவினரும், ஆலாந்துறை பகுதிக்கு, நேற்றுமுன்தினம் வந்தனர். அங்கிருந்து, 63 நாயன்மார்களை, தனித்தனி பல்லக்குகளில் ஏந்தி, ஆதியோகி தேவர்களுடன் ஈஷாவிற்கு ஊர்வலமாக வந்தனர். அவர்களுக்கு, ஈஷாவின் நுழைவு வாயிலில் இருந்து தியானலிங்கம் வரை, கையிலாய வாத்தியங்கள் முழங்க, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், ஹரியானாவை சேர்ந்த மதுராந்தா என்ற இளைஞர், உ.பி., மாநிலம், வாரணாசியில் துவங்கி, 41 நாட்கள், 2,300 கி.மீ., பாத யாத்திரையாக பயணித்து, ஆதியோகியை தரிசினம் செய்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,"சிவ பக்தியில் என்னை கரைத்து கொள்வதற்காக, இந்த பாதயாத்திரையை மேற்கொண்டேன். காசி முதல் கோவை வரையிலான இந்த யாத்திரையில், எனது நண்பர் ஒருவரும் உடன் வருவதாக திட்டமிட்டிருந்தோம். ஆனால், யாத்திரை துவங்கும் முன், அவர் விபத்தில் சிக்கி, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், நான் யாத்திரையை துவங்கினேன். ஆதியோகி சிவனின் அருளால், அவசர சிகிச்சை பிரிவில் இருந்து மீண்டு, எனது நண்பர், என்னுடைய யாத்திரையில், இடையில் வந்து சேர்ந்தார். இது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது,"என்றார். இந்த யாத்திரையில் கலந்து கொண்ட அனைவரும், மஹா சிவராத்திரிக்காக, 40 நாட்கள் சிவாங்கா விரதம் இருந்து வருகின்றனர். தினமும், 2 வேளை மட்டுமே உணவு உட்கொள்ளும் இவர்கள், வெள்ளியங்கிரி மலைக்கு சென்று வந்த பின், தியானலிங்கத்தில் தங்களது விரதத்தை நிறைவு செய்ய உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
மதுரை: கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அட்சய திருதியை விழாவை ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் அபிராமி அம்மன்உடனமர் காளஹஸ்தீஸ்வரர், ஞானாம்பிகை உடனமர் ... மேலும்
 
temple news
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி கோவில்களின் நடை திறக்கப்பட்டதை அடுத்து, ... மேலும்
 
temple news
சென்னை : தமிழகத்தில் வரும், 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. நாளை மாலை, 6:00 மணியுடன் பிரசாரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar