ராம நவமிக்கு பொது விடுமுறை; மேற்கு வங்க அரசு அறிவிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மார் 2024 11:03
கோல்கட்டா : மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
கடந்த ஆண்டு ராம நவமி கொண்டாட்டத்தின் போது, இங்குள்ள ஹவுரா, ஹுக்ளி உள்ளிட்ட இடங்களில் வன்முறை வெடித்தது. இரு சமூகத்தினர் மோதிக் கொண்டதில் இருசக்கர வாகனங்கள் எரிக்கப்பட்டன. பா.ஜ., - எம்.எல்.ஏ., உட்பட பலர் காயமடைந்தனர். இந்த விவகாரத்தில், திரிணமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.,வினர் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டினர். இந்த நிலையில், நாடு முழுதும் அடுத்த மாதம் 17ம் தேதி கொண்டாடப்பட உள்ள ராம நவமி பண்டிகைக்கு மேற்கு வங்க அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. இந்த பண்டிகைக்கு மேற்கு வங்க அரசு முதன்முறையாக பொது விடுமுறை அறிவித்துள்ளது.