Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எல்லாருமே அர்ஜுனர் தான்! பஞ்சாங்கம் தினமும் பார்க்கலாமா?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
காலம் பொன்னானது!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 அக்
2012
05:10

பெஞ்சமின் பிராங்க்ளின் என்ற அறிஞர், ஒரு புத்தகக்கடை வைத்திருந்தார். அன்று அவருக்கு முக்கியமான பணி. விற்பனையைக் கவனிக்கும்படி தனது பணியாளரிடம் சொல்லி விட்டு, தனது அறையில் இருந்து வேலையைப் பார்க்கத் துவங்கினார். அப்போது ஒரு வாடிக்கையாளர் வந்தார். புத்தகங்களைப் புரட்டிப் பார்த்துக் கொண்டே இருந்தார். நீண்ட நேரத்துக்குப் பின் ஒரு புத்தகத்தை எடுத்தார். விற்பனையாளரிடம் அதன் விலை என்ன என்றார்.  ஒரு டாலர் என்றார் விற்பனையாளர்.விலை அதிகமாக இருக்கிறதே என்றவர், இன்னொரு புத்தகத்தைத் தேடி எடுத்தார். அதன் விலையைக் கேட்டார். இதுவும் ஒரு டாலர் தான், என்ற விற்பனையாளரிடம்,தம்பி! இதன் விலை தொடர்பாக, நான் உங்கள் முதலாளியிடம் பேச வேண்டும். அவரை வரச்சொல்லுங்கள், என்றார்.ஐயா! அவர் முக்கியப் பணியில் இருக்கிறார். தங்களிடம் பேசும் அளவுக்கு நேரமில்லை. நீங்கள் இந்த விலையைக் கொடுத்து புத்தகத்தை எடுத்துச் செல்லுங்கள், என்றார்.விற்பனையாளரிடம் கடுமையாக வாதாடி, உரிமையாளர் இங்கே வந்தே ஆக வேண்டுமென அடம்பிடித்தார். வேறு வழியின்றி ஊழியர் பிராங்க்ளினிடம் சென்று விஷயத்தைச்  சொன்னார்.பிராங்க்ளின் வெளியே வந்தார். ஐயா! இந்த புத்தகம் எனக்கு வேண்டும். ஒரு டாலர் என்பது அதிகமாக இருக்கிறது. குறைத்துச் சொல்லுங்கள், என்றார். பிராங்க்ளின் மறுத்தார். சிறிதுநேரம் வாக்குவாதம் தொடர்ந்தது. கடைசியாக இதன்  விலையைக் கூறுங்கள், என்றார் வந்தவர். ஒரு டாலர் 25 சென்ட். என்றார் பிராங்க்ளின்.வாடிக்கையாளருக்கு அதிர்ச்சியாகி விட்டது. நான் குறைக்கச் சொன்னால் நீங்கள் உயர்த்திச் சொல்கிறீர்களே! எதற்கு? என்றார்.புத்தகத்தின் விலை ஒரு டாலர் தான். நான் நேரத்தைப் பொன்னாக மதிப்பவன்.  என் பணியை இவ்வளவு நேரம் கெடுத்தீர்களே! அதற்கு 25சென்ட், என்றார் பிராங்க்ளின்.வந்தவரோ விடாக்கண்டன். குறைத்தே ஆக வேண்டுமென அவரிடம் வாதிட, இரண்டு டாலர் என்றார் பிராங்க்ளின். வாடிக்கையாளர் கோபம் கொப்பளிக்க நின்ற போது, ஏன் மேலும் உயர்த்தினீர்கள்? என்றார்.நான் நேரத்தின் அருமையை உணர்ந்தவன். நீங்கள் உணரவில்லை. அதற்காகத்தான் இந்த விலை உயர்வு, என்றார்.வந்தவர் இரண்டு டாலரைக் கொடுத்துவிட்டு நடையைக் கட்டினார். உலகத்தில் விலை மதிப்பற்ற பொருள் நேரம் மட்டுமே. பணக்காரனாவதற்கு ஒரே தகுதி காலத்தின் அருமையை உணர்வது தான். சரிதானே!

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar