முப்பத்து முக்கோடி என்றால் 33 கோடி அல்ல. 33 என்ற எண்ணுக்குப் பிறகு 26 பூஜ்யங்கள் சேர்ப்பது என்ற கருத்து உண்டு. அத்தனை நாட்கள் பூமியில் வாழ்ந்தவன் ராவணன். சிவபக்தனான இவன், சிவதரிசனம் பெறுவதற்காக தனது ஒன்பது தலைகளை வெட்டி காணிக்கையாக்கினான். அப்படியும் தரிசனம் கிடைக்காமல் போகவே பத்தாவது தலையையும் வெட்ட முயன்றான். அப்போது காட்சியளித்த சிவனிடம், முப்பத்து முக்கோடி நாட்கள் நான் வாழ வேண்டும் என வரம் கேட்டான். அவரும் சம்மதிக்கவே, தன் வாழ்நாட்கள் முழுவதும் தினமும் ஒரு சிவலிங்கத்தை வழிபாடு செய்தான்.