திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் காவடிகளுடன் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மார் 2024 10:03
திருவண்ணாமலை ; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பக்தர்கள் காவடி எடுத்து மாட வீதி உலா வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தங்க கொடிமரம் அருகே உண்ணாமுலையம்மன் சமேதராய் அண்ணாமலையார் மற்றும் பராசக்தியம்மன் திருக்கல்யாண வைபவ விழாவில் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. திருக்கல்யாணம் வைபவம் முடிந்தவுடன் சிறப்பு அலங்காரத்தில் உண்ணாமுலையம்மன் சமேதராய் அண்ணாமலையார் மற்றும் பராசக்தியம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். பங்குனி உத்திரத்தை முன்னிட்டு காலை முதல் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து மாட வீதி உலா வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.