சென்னை ; சென்னை இஸ்கான் கோவிலில் கௌரா பூர்ணிமா விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சென்னை இஸ்கான் கோவிலில் இன்று மிகுந்த உற்சாகத்துடன் கௌரா பூர்ணிமா விழா கொண்டாடப்பட்டது. பக்தர்கள் ஒன்று கூடி ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு அவதரித்த தினத்தை நினைவு கூர்ந்தனர். விழாவில் சுவாமிக்கு பல்வேறு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் ஆரத்தி பாடல்கள் பாடி சுவாமியை வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி ரங்க கிருஷ்ண தாஸ் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.