திருச்செந்தூர் முருகன் கோயிலில் துர்கா ஸ்டாலின் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26மார் 2024 12:03
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் துர்கா ஸ்டாலின் வழிபாடு செய்தார்.
தூத்துக்குடியில் தி.மு.க., வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்ய உள்ள நிலையில், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று காலை சுவாமி தரிசனம் செய்ய வந்தார். கோயிலில் அவர் அனைத்து சன்னிதிகளுக்கும் சென்று தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.