விழுப்புரம்:ஆனாங்கூர் தோப்புமேடு கண்ணாடி அய்யனாரப்பன் கோவிலில் நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி கோவிலில் நேற்று முன்தினம் அதிகாலை 4 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், காப்பு கட்டுதல், முதற்கால யாகபூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து நேற்று காலை 7 மணிக்கு இரண்டாம் காலயாக பூஜை, தத்வார்ச்சனை, நாடிசந்தானம் நடந்தது. பின் காலை 9 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில் அ.தி. மு.க., மாவட்ட செயலாளர் லட்சுமணன் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை சுப்ரமணியம், கணேசன் குருக்கள் செய்திருந்தனர்.