திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் வெள்ளை விநாயகர் கோவில், ஏகாம்பரேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடந்தது. திருக்கோவிலூர் வெள்ளை விநாயகர் கோவிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரருக்கு நேற்று மாலை ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு மகா அன்னாபிஷேகம் நடந்தது.முன்னதாக காலையில் வெள்ளை விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனையும் நடந்தது. மாலை 6 மணிக்கு ஏகாம்பரேஸ்வரருக்கு அன்னம் மற்றும் காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டு, தீபாராதனை நடந்தது. அலங்காரம் களையப்பட்டு மகாஅபிஷேகமும், இதனையடுத்து சிறப்பு அலங்காரத்தில் சோடசோபாபச்சார தீபாராதனையும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை விஸ்வகர்மா சமூகத்தினர் செய்திருந்தனர்.