அவிநாசி ராக்காத்தம்மன் கோவிலில் கால் கோல் மற்றும் பாலாலய விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மார் 2024 10:03
அவிநாசி; அவிநாசியில், சுமார் 300 ஆண்டுகள் பழமையான ராக்கத்தம்மன் கோவிலில் கால் கோல் மற்றும் பாலாலய விழா நடைபெற்றது.
அவிநாசி சேவூர் ரோட்டில் எழுந்தருளியுள்ள சுமார் 300 ஆண்டுகள் பழமையான ராக்காத்தம்மன் கோவில் உள்ளது. கோவில் அருகே இருந்த குட்டையில் இருந்து நீரை எடுத்து தலையில் தெளித்தால் காய்ச்சல் முற்றிலும் குணமாகியதாக ஐதீகம் இருந்தது. மேலும் பில்லி சூனியம், ஏவல், திருமணத்தடை, குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்கான பரிகாரத்தலமாகவும் விளங்கி வந்தது. இதில் கோவில் இடவசதி பற்றாக்குறையால்,புதியதாக நேரு வீதியில் இடம் மாற்றம் செய்வதற்காக கடந்த 20ம் தேதி கால்கோல் விழா நடைபெற்றது. நேற்று வாஸ்து சாந்தி,கணபதி ஹோமம் ஆகியவற்றுடன் பாலாலய பூஜைகள் நடைபெற்றது. இதற்கான திருப்பணிகளில் பழனிச்சாமி, கணேசன், ரவி, மூர்த்தி,தெய்வசிகாமணி, திருமூர்த்தி ஆகியோர் செய்தனர்.