பதிவு செய்த நாள்
30
மார்
2024
12:03
பெங்களூரு, தண்ணீர் பிரச்சனையைத் தீர்க்க வேண்டி, ஜோடி முனேஸ்வரா சுவாமி கோவில் சார்பில், அரபி கடலில் சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது. பெங்களூரு பீன்யா 2ம் கட்டம், ஆந்திராஹள்ளி முக்கிய சாலையில், ஜோடி முனேஸ்வரா சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் சார் பில், தர்மாதிகாரி சிவசங்கர் குருக்கள், மாநிலம் முழுதும் தண்ணீர் தட்டுப் பாடு ஏற்பட்டுள்ளதால், உயிரினங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாலும், உலக அமைதிக்காகவும் அரபி கடற்கரையில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. நடுக்கடலில் படகிலேயே ஹோமம் நடத்தி, சிறப்பு பூஜைகள் செய்யப் பட்டன. இதற்காக உத்தர கன்னடா மாவட்டம், கார்வார் கோடிபாக் பகுதியில் மணலில் லிங்கம் வடிவ மைத்து பூஜை செய்யப்பட்டது. அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பூஜையில் பங்கேற்று, தண்ணீர் பிரச்னை தீர்க்கும்படி வழிபாடு நடத்தினர்.