பதிவு செய்த நாள்
30
மார்
2024
01:03
தக்கலை, வேளிமலை முருகன் கோவிலில் நேற்று திருக் கல்யாண திருவிழா அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமத் துடன் துவங்கியது. தொடர்ந்து முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், பஸ் மாபிஷேகம் நடந்தது. பின்னர் நடந்த விளக்கு பூஜையை குருந்தங் கோடு சேர்மன் அனுஷா தேவி, தீபா சுனில், கவுன்சிலர் ஸ்ரீதேவி, தீபிகா ஒளியேற்ற சீதாலட்சுமி திருவிளக்கு பூஜையை நடத்தினார். பின்னர் முருகப்பெ ருமானுக்கும் வள்ளி நாயகிக்கும் காப்பு கட் டும் நிகழ்ச்சி நடந்தது. ஏழை பெண்களுக்கு திருமண வைப்பு நிதி, பூஜையில் கலந்து கொண்டவர்களுக்கு குலுக்கல் முறையில் பரி சுகள் வழங்கப்பட்டன. மாவட்ட அறங்கா வலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இரவில் குமரி மற்றும் கேரள பக்தர்களின் காவடிக்கட்டு நிகழ்ச்சி நடந் தது. விழா குழு உறுப் பினர் கோசி ராமதாஸ், வழக்கறிஞர் வேலு தாஸ், சட்ட ஆலோசகர் பத்மகுமார், மாதவன் பிள்ளை, நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இன்று இரண்டாம் நாள் விழா காலையில் மலையில்அமைந்துள்ள விநாயகருக்கு கணபதி ஹோமம் அபிஷேகம் தீபாராதனை ஆகியவை நடக்கும். தொடர்ந்து சுவாமி கல்யாண மண்டபத்தில் எ ழுந்தருள்வார். ராமாயண பாராயணம் நடக்கும். அன்னதானம் வழங்கப்படும். பிற்பகல் 3 மணிக்கு சுவாமி வள்ளிநாயகியு வள் டன் மலையில் இருந்து பூப்பல்லக்கில் எழுந் தருள்வார். தொடர்ந்து குறவர் படுகளப்போர் மாலை 4 மணி முதல் 5 மணி வரை நடக்கும். படுகள போரின்போது முருக பெருமானிடம் சரண் அடைவார்கள்.
தொடர்ந்து திருவிழா குழு கவுரவ தலைவர் ரமேஷ் தலைமையில் சமய மாநாடு நடக் கும் கனிஷ்கா இறை வணக்கம் பாட, நட ராஜன் வரவேற்கிறார். இரணியல் பேரூராட்சி முன்னாள் தலைவர் கோபகுமார் நகர்மன்ற துணை தலைவர் உன்னிகிரு ஷ் ணன் இந்து முன்னணி பிரமு கர்மிசா சோமன் எம் ஆர் காந்தி எம்எல்ஏ ஆகி யோர் பேசுகின்றனர்.
திருக்கல்யாணம்; இதைத்தொடர்ந்து திருக்கல்யாண முகூர்த்தம் நடக்கும் சுமார் 2000க்கும் மேற் பட்ட பக்தர்களுக்கு மாங்கல்ய பிரசாதம் விழா குழு பேட்ரன் பிரசாத் தலைமை யில் தலைவர் சுனில் குமார், செயலாளர் சுரேஷ், பொருளாளர் சுந்தரேஷ், உதவி தலைவர்கள் முனைவர் ராம தாஸ், ஆண்டி பிள்ளை, கிருஷ்ணபிள்ளை, குலசேகரன் பிள்ளை, குமாரதாஸ், உதவி செயலாளர்கள் செந்தில், ராஜேஷ், பிரதீப், முருகதாஸ், கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் இணைந்து வழங்குவார்கள். ஏற்பா டுகளை திருக்கல்யாண திருவிழா நிர்வாகிகள் செய்துள்ளனர்.