ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஏப் 2024 06:04
ராமேஸ்வரம்; விடுமுறை நாள் யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
நேற்று விடுமுறை நாள் யொட்டி தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர். பக்தர்கள் முதலில் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டி புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம் பூஜை செய்தனர். பின் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி விட்டு கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினார்கள். இதன்பின் கோயிலில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வருகையால் கோயில் வளாகம், சன்னதி தெரு, அக்னி தீர்த்த கடற்கரையில் கூட்ட நெரிசலாக இருந்தது. ராமேஸ்வரம் திட்டக்குடி, பஸ் ஸ்டாண்ட் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.