பதிவு செய்த நாள்
01
ஏப்
2024
06:04
பந்தலூர்; பந்தலூர் அருகே நெலாக்கோட்டை பகுதியில் அருள்மிகு ஶ்ரீ முனீஸ்வரன், மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த,29ல் பிரபாதபூஜை, கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து மதிய பூஜை, தீபாராதனை,பகவதி சேவை,அத்தாழ பூஜை, சக்தி கும்பம் புறப்படுதல் நடந்தது. மறுநாள் காலை கணபதி ஹோமம், பிரதிஷ்டாதின பூஜை, தாயம்பகா, உச்ச பூஜையும், தொடர்ந்து அன்னதானம் வழங்குவதும் நடந்தது. மாலை செண்டை மேளம்,அம்மன் குடம், மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து இசை நிகழ்ச்சி இடம்பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். விழாவில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.