திருத்தங்கல் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஏப் 2024 06:04
சிவகாசி; சிவகாசி, திருத்தங்கல் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
சிவகாசியில் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில், ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் , சிம்மம், காம தேனு, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் ரதவீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாவிப்பார். ஏப். 7 ல் பொங்கல் விழாவும், ஏப். 8 ல் கயர் குத்து விழாவும், ஏப்.9 ல் தேரோட்டமும் நடைபெறும். திருவிழாவை முன்னிட்டு தினமும் இரவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இதே போல் திருத்தங்கல் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவும் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. சுவாமி தினமும் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனத்தில் வீதி உலா வருவார். ஏப். 11 ல் தேரோட்டம் நடைபெறும். ஏராளமான பக்தர்கள் கொண்டனர்.
* இதேபோல் திருத்தங்கல் இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட சக்தி மாரியம்மன் கோயிலில் 49 வது பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடந்தது. அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. இங்கும் 11 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.