சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் கொடியேற்றம்; 25ம் தேதி தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஏப் 2024 07:04
சோழவந்தான்; சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழாவையொட்டி மூன்று மாத கொடியேற்றம் நடந்தது. இக்கோயிலில் வைகாசி திருவிழா 17 நாட்கள் நடக்கும். நேற்று இரவு பக்தர்கள் பின்தொடர பூஜாரி சண்முகவேல் கொடியுடன் ரதவீதிகளை சுற்றி ஊர்வலம் வந்தார். பக்தர்கள் பக்தி கோஷம் முழங்க பீடத்தில் கொடி ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. முக்கிய நிகழ்வாக ஜூன் 10ல் திருவிழா கொடியேற்ற்ம், 18ல் பால்குடம், அக்னிசட்டி,19ல் பூக்குழி, 25ல் தேரோட்டம் நடக்கிறது.