துர்க்கை அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா; பூ அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஏப் 2024 07:04
பரமக்குடி; பரமக்குடி சின்னக்கடை தெரு துர்க்கை அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழாவையொட்டி மூலவர் பூக்களால் அலங்கரிக்கப்பட்டார். இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை தமிழ் புத்தாண்டில் பூச்சொரிதல் விழா நடப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு 7:00 மணிக்கு சிவ பார்வதி நடனத்துடன், கைலாய வாத்தியம் முழங்க பூத்தட்டுகள் ஊர்வலமாக வந்தது. தொடர்ந்து இரவு 10:00 மணிக்கு மூலவர் துர்க்கை அம்மன் பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டார். பின்னர் இரவு 11:00 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.