பதிவு செய்த நாள்
16
ஏப்
2024
09:04
ஜம்மு - காஷ்மீரில், இமயமலை பகுதியில், 3,880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது, அமர்நாத் குகைக்கோவில். இக்கோவிலுக்கு, ஆண்டுதோறும் பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான புனித யாத்திரை, ஜூன், 29ல் துவங்கி ஆக., 19ல் முடிவடைகிறது. இந்த யாத்திரையில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. பால்டால் மற்றும் சந்தன்வாரி ஆகிய இரு வழிகளில் அமர்நாத் யாத்திரை செல்ல விரும்புவோர், தங்கள் புகைப்படத்துடன் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். அங்கீகாரம் பெற்ற டாக்டர்கள் மற்றும் மருத்துவமனைகள் மூலம், ஏப்.,8ம் தேதிக்கு பின் வழங்கிய சுகாதார சான்றிணை, விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். ஆன்லைன் பதிவின் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், கோவில் வாரிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த யாத்திரையில், 13 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள், 75 வயது கடந்தோர் மற்றும் கர்ப்பிணியர்களுக்கு அனுமதி இல்லை.