திருச்சூர் பூரம் திருவிழா நாளை கோலாகலம்; யானை மீது வலம் வந்த நெய்திலைக்காவு பகவதி அம்மன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஏப் 2024 10:04
பாலக்காடு; திருச்சூர் பூரம் திருவிழா நாளை நடைபெற உள்ளது.
கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் வடக்குநாதர் கோவில். இங்கு எல்லா ஆண்டு பூரம் திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு திருவிழா நாளை (19ம் தேதி) நடக்க உள்ளது. இந்த நிலையில் விழா நாள் மாலை தேக்கின்க்காடு மைதானத்தில் இரு புறம் நேருக்கு நேர் அணி வகுத்து நிற்க்கும் பாரமேக்காவு பகவதி அம்மன் மற்றும் திருவம்பாடி கிருஷ்ணர் கோவில்களின் தலா 15 யானைகள் அணியும் ஆடை, ஆபரண, முத்து மணி கடைகளின் கண்காட்சி நேற்று நடந்தது. யானைச்சமயம் என்ற அழைக்கும் இந்த கண்காட்சியை ஏராளமானோர் கண்டு மகிழ்ந்தனர். தொடர்ந்து மாலை 7 மணிக்கு நடந்த வான வேடிக்கை காணவும் ஏராளமானோர் திரண்டு வந்திருந்தனர். பூரம் திருவிழா விளம்பரம் செய்யும் வகையில் இன்று (18ம் தேதி) காலை 8 மணியளவில் செண்டை மேளம் முழங்க நெய்திலைக்காவு பகவதி அம்மன், எர்ணாகுளம் சிவகுமார் என்ற யானை மீது எழுந்தருளி வடக்கு நாதரை வணங்கி தெற்கு கோபுர நடை திறந்து வெளியை வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் வைபவம் நடைபெறுகிறது. இதையடுத்து 30 மணி நேரம் நீண்டு நிற்க்கும் விழாவிற்கு ஆரம்பமாகும்.