ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ராமநவமி வழிபாடு சிறப்புடன் நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று காலை ஆண்டாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நாடக சாலை தெரு திருவேங்கடமுடையான் சன்னதியில் காலை 11:00 மணிக்கு ராமர், சீதை, லட்சுமணன் எழுந்தருளினர். அங்கு ராமநவமி வழிபாடுகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் பக்தர்கள் செய்திருந்தனர்.