பதிவு செய்த நாள்
20
ஏப்
2024
12:04
சிவாஜி நகர், சிவாஜி நகர் தண்டு மாரியம்மன் கோவிலில் வரும் 23ம் தேதி சண்டி மஹா யாகம் நடக்கிறது. சிவாஜி நகர் சிவாஜி சதுக்கத்தில் உள்ள தண்டு மாரியம்மன் கோவிலில் 64ம் ஆண்டு லட்ச லலிதா சஹஸ்ரநாமம் மற்றும் சண்டி மஹாயாகம் நேற்று துவங்கியது. நேற்று முதல் வரும் 22ம் தேதி வரை தின மும் காலை 9:00 மணி முதல் பகல் 12:00 மணி வரையிலும்; மாலை 5:00 மணி முதல் இரவு 7:30 மணி வரையிலும் லட்சார்ச்சனை; பின்னர், முறையே பகலிலும், இர விலும் மஹா மங்களாரத் தியும், தீர்த்த பிரசாத வினி யோகமும் நடக்கிறது. காலை 10:30 மணிக்கு அம்மன் பிரகார உற்சவம் நடக்கிறது. வரும் 22ம் தேதி காலை யில், சுமங்கலி பூஜை நடக்கிறது. லட்சார்ச்சனை பூஜைக்கு பணம் செலுத்தி வர்கள், சுமங்கலி பூஜை யில் பங்கேற்கலாம். வரும் 23ம் தேதி காலை யில் கணபதி பூஜை, சங்கல்பம், கலச ஸ்தாப னம்; சண்டி மஹா யாகம் நடக்கிறது. இந்த யாகம் மூன்று மணி நேரம் நடக்கும் என்பது குறிப்பிடத்தக் கது. இதன்பின், மஹா மங்களாரத்தி காண்பிக்கப்படுகிறது. தொடர்ந்து பக்தர்க ளுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டி தலை வரும், மேலாளருமான வி.ஏ.மோகன் ரங்கம், செயலர் ஏ.விஜய்சேகர், கே.ஜெகந்நாத பிள்ளை, சரோஜினி பாலசுந்தரம், மகேஸ்வரி விஜயசாரதி, எஸ்.கோவிந்தராஜ், எம். மதன் கோபால், டி.தாமோ தரன், சி.அப்பு ஆகியோர் செய்துள்ளனர்.