திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் 6ம் நாள் வசந்த உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஏப் 2024 12:04
திருக்குறுங்குடி; திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயிலில் கோடையை முன்னிட்டு நடைபெறும் வசந்த உற்சவத்தில் நேற்று 6வது நாள் உற்சவம் நடந்தது. திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயிலில் கடந்த14ம் தேதி வசந்த உற்சவம் துவங்கியது. 6வது நாள் உற்சவமான நேற்று காலையில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலையில் ராமானுஜ ஜீயர் முன்னிலையில் பெருமாள் கிளிக்கொரடு மண்டபத்தில் எழுந்தருளி அருள் பாலித்தார். சிறிய திருமடல்சேவையின் போது மாலை சாத்துதல்,சிறப்பு தீபாராதனை நடந்தது. ராமானுஜர் உள் வீதியில்பெருமாள் புறப்பாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வரும் 23ம் தேதி சித்ராபவுர்ணமி நாளன்று 10வது நாள் வசந்தஉற்சவம் நிறைவடைகிறது. ஏற்பாடுகளை ஜீயர் மடம் பவர் ஏஜன்ட் பரமசிவன் தலைமையில் ஜீயர் மடம் ஊழியர்கள் செய்துள்ளனர்.