புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா நிறைவு; யானைகள் வடக்கு நாதர் வணங்கி சென்றன
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஏப் 2024 04:04
கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது.
கேரள மாநிலத்தில் புகழ் பெற்றது திருச்சூர் வடக்குநாதர் கோவில். இங்கு ஆண்டு தோறும் சித்திரை மாதம் பூரம் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு பூரம் திருவிழா சிறப்பாக நடைபெற்று வந்தது. விழாவில் நேற்று 30 யானைகள் அணிவகுத்து நின்று வண்ணக் குடை மாற்றும் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. இதை பல்லாயிரக்கணக்கானோர் பக்தி பரவசத்துடன் கண்டு வழிபட்டனர். புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுடன் இன்று நிறைவடைந்தது. விழாவில் இன்று திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் மற்றும் பாரமேக்காவு பகவதி அம்மன் கோவில் யானைகள், துதிகை உயர்த்தி வடக்கு நாதர் கோவிலில் வணங்கி, உபசரித்துச் செல்லும் நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.