பதிவு செய்த நாள்
20
ஏப்
2024
05:04
மேட்டுப்பாளையம்; மருதூரில் உள்ள அனுமந்தராய ஆஞ்சநேயர் கோவிலில், சித்திரை மாதம் முதல் சனிக்கிழமை விழா கொண்டாடப்பட்டது.
காரமடை அருகே மருதூரில் மிகவும் பழமை வாய்ந்த, அனுமந்தராய ஜெய மங்கள ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் சனிக்கிழமை விழா நடைபெறும். சித்திரை மாதம் முதல் சனிக்கிழமை விழா இன்று நடைபெற்றது. காலையில் கோவில் நடை திறந்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மா, பலா, வாழை, ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, திராட்சை, சப்போட்டா, லிச்சி, பப்பாளி, முலாம்பழம், தர்பூசணி, மங்குஸ்தான், அண்ணாச்சி, எலுமிச்சை உள்ளிட்ட, 21 வகையான பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டது. மூலவர் பலவகை கனி அலங்காரத்தால், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதனைத் தொடர்ந்து சிறுமுகை வெள்ளிக்குப்பம்பாளையம் குழுவினரின், வள்ளி கும்மி கலை நிகழ்ச்சி நடந்தது. பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஆஞ்சநேயா அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.