பதிவு செய்த நாள்
23
ஏப்
2024
10:04
திருப்பூர் சின்னாண்டிபாளையம் ஸ்ரீ சித்ரகுப்தர் கோவில் 95ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் நடந்தது. சித்ரகுப்தர், வெள்ளிக்கவசம் தரித்து, தங்க கிரீட அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
தமிழகத்திலேயே, காஞ்சிபுரத்துக்கு அடுத்தபடியாக, திருப்பூர், சின்னாண்டிபாளையத்தில் உள்ள சித்ரகுப்தர் அருள்பாலிக்கிறார். கோவிலில், 95ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில், சித்ரகுப்தருக்கு, 16 வகையான திரவியங்களால், அபிஷேகம் மற்றும் புனித கலசநீர் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. சித்ரகுப்தர் வெள்ளிக்கவசம் தரித்து, தங்க கிரீட அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.