Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தமிழகத்திலேயே 3வது பெரிய தேரான ... சித்ரா பவுர்ணமி; வெள்ளிக்கவச அலங்காரத்தில் சித்ரகுப்தர் அருள்பாலிப்பு சித்ரா பவுர்ணமி; வெள்ளிக்கவச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைத்தியநாத சுவாமி கோவிலில் குலதெய்வ வழிபாடு; லட்சக்கணக்கானோர் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
வைத்தியநாத சுவாமி கோவிலில் குலதெய்வ வழிபாடு; லட்சக்கணக்கானோர் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

23 ஏப்
2024
10:04

மயிலாடுதுறை: வைத்தீஸ்வரன்கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலில் லட்சக்கணக்கானோர் பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் தேவார பாடல் பெற்ற தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோவிலில் அமைந்துள்ளது. நவகிரகங்களில் செவ்வாய் ஸ்தலமாக திகழ்கிறது. இங்கு செல்வ முத்துகுமார சுவாமி, சித்த வைத்தியத்தின் அதிபதியான தன்வந்திரியும் தனி சன்னிதியில் அருள்பாலித்து வருகிறார். இங்குள்ள சித்தாமிர்த தீர்த்தத்தில் நீராடி கோவிலில் வழங்கபடும் திருச்சாந்துருண்ணடையை  பிரசாதமாக உட்கொண்டால் 4448 வியாதிகள் குணமாகும் என்பது ஐதீகம்.
இக்கோவிலின் சித்திரை இரண்டாம் செவ்வாயான இன்று நகரத்தார் வழிபாடு  நடைபெற்று வருகிறது. காரைக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ஒரத்தநாடு, கந்தர்வகோட்டை, பேராவூரணி, கீழசீவல்பட்டி, பரமகுடி, திருச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த  லட்சக்கணக்கான நகரத்தார் மக்கள் பாதயாத்திரையாக வந்து  நேர்த்திக்கடன் செலுத்தி தங்கள் குல தெய்வ வழிபாட்டை நிறைவேற்றி வருகின்றனர்.

பண்டைய காலத்தில்  பூம்புகார் பகுதியில் இருந்து பல்வேறு பகுதிகளில் குடியேறிய நகரத்தார் மக்கள் பல தலைமுறைகலாக ஆண்டு தோறும் சித்திரை மாதம் இரண்டாவது செவ்வாய் கிழமை பாதயாத்திரையாக வந்து தங்கள் குலதெய்வமான தையல்நாயகியை வழிபடுவது வழக்கம். சித்திரை மாதம் முதல் செவ்வாய் அன்று தங்கள் வேண்டுதல் நிறைவேற வீட்டில் மஞ்சள் தடவிய குச்சியை வைத்து பூஜித்து பாதயாத்திரை துவங்கும் மக்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதற்கு காணிக்கையாக அந்த குச்சியை கோவில் கொடிமரத்தில் செலுத்துகின்றனர். பின்னர் அம்பாள் மற்றும் சுவாமியை வழிபடும் நகரத்தார் மக்கள் தங்களுடைய புதிய வேண்டுதலுக்காக கொடிமரத்தில் இருந்து மாற்று குச்சியை எடுத்து செல்வதும்  வழக்கமாக உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் குவிந்துள்ளதால் 200 க்கும் மேற்பட்ட போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பக்தர்கள் வசதிக்காக சீர்காழி, மயிலாடுதுறை, சிதம்பரம், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு சிறப்பு பஸ்கள்  இயக்கப்பட்டு வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 திருப்பூர்; உலக நலன் வேண்டியும், தொழில் வளம் சிறக்கவும் வேண்டி, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், மஹா ... மேலும்
 
temple news
கோவை; பெரிய நாயக்கன்பாளையம், குப்பிச்சிபாளையம் ரோடில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ... மேலும்
 
temple news
சோழவந்தான்; சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா தீர்த்தவாரி உற்ஸவத்துடன் ... மேலும்
 
temple news
தேனி; தேனி பெத்தாட்சி விநாயகர் கோயிலில் நடராஜன் சிவகாமியம்மாள் சுவாமி முன் ஆனி திருமஞ்சனத்தையொட்டி ... மேலும்
 
temple news
உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை அருகே, 22 ஆண்டுகளுக்கு முன் கண்டெடுக்கப்பட்ட பஞ்சலோக சிலைகள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar